செய்திகள் :

தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?

post image

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள பேரணிக்கு தில்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு வாக்குத் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சான்றுகளுடன் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, வாக்குத் திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்று பேரணி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் பேரணிக்கு இதுவரை எவ்வித அனுமதி கோரவில்லை என்று தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளருடன் பேசிய சமாஜவாதி எம்பி ராம்கோபால் யாதவ், ”தில்லியின் தெருக்களில் நடக்க எம்.பி.க்களுக்கு அனுமதி தேவையில்லை. எம்.பி.க்கள் சாலைகளில் பேரணி செல்வதில் ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாக இருந்தால், இந்த அமைப்பே பயனற்றது.” எனத் தெரிவித்துள்ளார்.

permission has not been sought from the Delhi Police for the rally to be led by Rahul Gandhi.

இதையும் படிக்க : தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிய பாஜக: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்ன... மேலும் பார்க்க

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில... மேலும் பார்க்க

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்... மேலும் பார்க்க

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதனை தகர்ப்போம் என்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மேலும், காஷ்மீரை பாகிஸ்த... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மஞ்சள் எச்சரிக்கை: மீட்பு பணியில் தொய்வு!

உத்தரகண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தர... மேலும் பார்க்க