செய்திகள் :

தில்லியில் ஒரே நாளில் 90 விமானங்கள் ரத்து!

post image

தில்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் 90 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்நாட்டிலுள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில் இருநாடுகளும் தங்களது வான்வழித் தடங்களை மூடியதுடன், விமானங்களின் போக்குவரத்தை மிகப் பெரியளவில் குறைத்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலுள்ள 27 விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், தலைநகர் தில்லியின் விமான நிலையத்தில் 11 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து உள்பட மொத்தம் 90 விமானங்களின் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று (மே 8) காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரையில், அங்கிருந்த புறப்பட வேண்டிய 46 விமானங்கள் மற்றும் வரவிருந்த 33 விமானங்களின் போக்குவரத்து ரத்தாகியுள்ளன.

இருப்பினும், தில்லி விமான நிலையத்தின் 4 விமான ஓடுபாதை வழக்கம் போல் செயல்பட்டதாகவும், வான்வழித் தடங்களின் மாற்றத்தினால் சில விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை! இது 2-வது முறை!!

இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தனின் 2 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன!

ஜம்மு - காஷ்மீரின் நெளஷேரா பகுதியில் பாகிஸ்தானின் 2 ட்ரோன்களை ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர்.நெளஷேரா பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரை மணிநேரத்துக்கும் மேலாக கடுமையான பீரங்கி தாக்குதல் நடந்து வ... மேலும் பார்க்க

உரி பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்!

ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எல்லையோரப் பகுதியில் உள்ள உணவகம், விடுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!

இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்... மேலும் பார்க்க

பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

பஞ்சாபின் பதான்கோட் அருகில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந... மேலும் பார்க்க

ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் காவல் துறை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் எச்சரிக்கை... மேலும் பார்க்க