தில்லியில் யாா் ஆட்சி?: பாஜக 30 இடங்களில் முன்னிலை
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 30 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
புதுதில்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ்வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பின்தங்கியுள்ளார்.
கல்காஜி தொகுதியில், முதல்வர் அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட பின்தங்கியுள்ளார்.
ஜங்புராவில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் பின்தங்கியுள்ளார்.
பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளர் சவுரப் பரத்வாஜ் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆதிக்கம் அப்படியே இருக்கிறதா அல்லது 1998-க்குப் பிறகு முதல் முறையாக தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும்.