செய்திகள் :

தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

post image

தலைநகர் தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் விஹார் மற்றும் துவாரகா செக்டார் 16 இல் உள்ள பள்ளிகளிலிருந்தும், சாணக்யபுரியில் உள்ள மற்றொரு பள்ளியிலிருந்தும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை காலை 8 மணியளவில் அழைப்புகள் வந்தன. உடனே அப்பள்ளிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

துவாரகா துணை காவல் ஆணையர் அங்கித் சிங் கூறுகையில், "பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக துவாரகா வடக்கு காவல் நிலையத்திற்கு திங்கள்கிழமை அதிகாலை அழைப்பு வந்தது. உள்ளூர் காவல்துறை, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையினர் பள்ளியை அடைந்து உரிய சோதனைகளை நடத்தினர்.

அமர்நாத்தில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: புதிய குழு இன்று புறப்பட்டது!

பள்ளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சைபர் போலீஸ் நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை கண்டறிந்து வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இதனால் தலைநகர் தில்லியில் பரபரப்பு நிலவியது.

At least three schools in the national capital received bomb threats on Monday morning, prompting the emergency services to be kicked in, a Delhi Police official said.

கொல்கத்தா மருத்துவமனை ஊழல் வழக்கு: ஜூலை 22முதல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் - சிபிஐ

கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஆர். ஜி. கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இளநிலை பெண் மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா... மேலும் பார்க்க

நச்சு வாயுவை பிரித்தெடுப்பதில் இருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு!

நச்சுத்தன்மை வாய்ந்த துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவுவதில் இருந்து நாட்டின் 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.அனல் மின் நிலையங்களில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொரு... மேலும் பார்க்க

நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சி: கேரள இஸ்லாமிய தலைவர் யேமன் தலைவர்களுடன் பேச்சு

திருவனந்தபுரம்: கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்ப... மேலும் பார்க்க

சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,''திரைத் துறை ஆளுமை பி. சரோஜா தேவியின் மறைவு வருத்த... மேலும் பார்க்க

விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் பிரிவதில் தாமதம்

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையம் சென்றிருந்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை (ஜூலை 14) மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயண... மேலும் பார்க்க

திருப்பதி அருகே விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திருப்பதி ரயில்நிலையத்துக்கு அருகே ஹிசாரிலிருந்து இருந்து திருப்பதி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விப... மேலும் பார்க்க