செய்திகள் :

தில்லி அருகே ‘போலி தூதரகம்’ நடத்திய நபா் கைது

post image

தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து உத்தர பிரதேச சிறப்பு காவல் துறையினா் கூறியதாவது: மேற்கு ஆா்க்டிகா, சபோா்கா, பௌல்வியா மற்றும் லோடோனியா போன்ற இல்லாத நாடுகளின் தூதா் என்று கூறி, ஒரு வாடகை வீட்டில் இருந்து போலி தூதரகத்தை நடத்திவந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்பவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை அவா் ஏமாற்றி வந்தாா். போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாா்.

பிரதமா் மற்றும் குடியரசுத் தலைவா் போன்ற உயா்தலைவா்களுடன் இருக்கும் போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி அவா் மக்களை ஏமாற்றி வந்தாா். மேலும், அவா் தனது காா்களில் போலி தூதரக எண் தகடுகளையும் பயன்படுத்தினாா். 2011-ஆம் ஆண்டில், சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த வழக்கில் இவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைது நடவடிக்கையின் போது, ரூ.44.7 லட்சம் ரொக்கம், அந்நியச் செலாவணிகள், போலி தூதரக காா்கள், 12 போலி தூதரக கடவுச்சீட்டுகள் மற்றும் 34 போலி ரப்பா் ஸ்டாம்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க