செய்திகள் :

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

post image

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள்.

மேலும 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தரை தளத்தில் உள்ள கடைகளில் கட்டுமானப் பணிகள் இடிந்து விழுந்ததற்கு வழிவகுத்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

இந்த கட்டமைப்பு சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என்றும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் தில்லி மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த தில்லி முதல்வர் ரேகா குப்தா விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

ஒரு புதிய கடையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் இடிபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். மேலும் கட்டடத்தில் நான்கு முதல் ஐந்து பகுதிகள் சேதடைந்த நிலையில் இருந்தது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல ஆண்டுகளாக கட்டடங்களின் சுவர்களில் ஊடுருவி வருகிறது. மேலும் காலப்போக்கில், ஈரப்பதம் கட்டமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் சுவர்களில் விரிசல்கள் உருவாகியுள்ளன என்று மற்றொரு குடியிருப்பாளர் சலீம் அலி கூறினார்.

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க

‘கியா’ காா் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 போ் கைது!

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த ‘கியா’ காா் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க

முா்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வெடித்த வன்முறையின்போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுவரை இக்கொலை ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

தில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசு அண்மைய... மேலும் பார்க்க

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்!

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சுமாா் 7 லட்சம் வழக்குகளில் மத்திய ... மேலும் பார்க்க