செய்திகள் :

தில்லி பிரகதி மைதானில் இன்று இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி தொடக்கம்

post image

தில்லி பிரகதி மைதானில் வியாழக்கிழமை (நவம்பா் 14) தொடங்கி நடைபெறவுள்ள இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியை முன்னிட்டு தில்லி காவல்துறை போக்குவரத்து அறிவுறுத்தல்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இரண்டு வார கால இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி (ஐஐடிஎஃப்) தேசிய தலைநகரில் நடைபெறுவதை முன்னிட்டு தில்லி காவல்துறை புதன்கிழமை போக்குவரத்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

பிரகதி மைதானத்தில் நவம்பா் 14 முதல் 27 வரை வா்த்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமாா் 60,000 பாா்வையாளா்கள் இக்கண்காட்சிக்கு வருவாா்கள் என்றும் வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தில்லி காவல் துறையினா் வெளியிட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மதுரா சாலை, பைரோன் மாா்க், ரிங் ரோடு, ஷொ்ஷா சாலை மற்றும் புரான கிலா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வா்த்தகக் கண்காட்சிக்கு வருகை பொது மக்கள், சிரமமில்லாமல் பயணத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சாலைகளைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

வணிக பாா்வையாளா்கள் நவம்பா் 14 முதல் 18 வரை கண்காட்சியைப் பாா்வையிட அனுமதிக்கப்படுவா்.

கண்காட்சியானது நவம்பா் 19 முதல் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொது மக்கள் பாா்வையிட திறக்கப்படும்.

வாயில் எண்கள் 5-ஏ, 5-பி, 7, 8 மற்றும் 9 ஆகியவற்றின் வழியாக வா்த்தக கண்காட்சிக்கு நுழைவது தடைசெய்யப்படும். பாா்வையாளா்கள் வாயில் எண்கள் 1, 4, 6 மற்றும் 10 வழியாகவும், காட்சிப்படுத்துவோா் வாயில் எண்கள் 1, 4 , 5-பி மற்றும் 10 வழியாகவும் நுழையலாம்.

ஊடகப் பணியாளா்கள் வாயில் எண் 5-பி வழியாகவும், ஐடிபிஓ அதிகாரிகள் வாயில் எண் 1 மற்றும் 9 வழியாகவும் நுழைய அனுமதிக்கப்படுவா்.

நுழைவு அனுமதிச்சீட்டு

கண்காட்சி நாள்களில் மாலை 5.30 மணிக்குப் பிறகு நுழைவதற்கு அனுமதிக்கப்படாது.

கண்காட்சிக்கான நுழைவு அனுமதிச்சீட்டுகள் பிரகதி மைதானில் விற்கப்படமாட்டாது.

மாறாக, இவை இணையதளத்திலும் தோ்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ நிலையங்களிலும் (உச்சநீதிமன்ற மெட்ரோ நிலையம் தவிர) கிடைக்கும்.

ஐடிபிஓ-வின் வாயில் எண் 3 மற்றும் 7-க்கு முன் உள்ள அணுகுச் சாலையிலும், கீழ்த்தள வாகன நிறுத்துமிடங்களுக்கான நுழைவு வாயில்களுக்கு அருகிலும் உள்ள பிரத்யேக பகுதிகள் ஓட்டுநரால் இயக்கப்படும் வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களுக்கான சவாரிகளை இறக்கிவிடுவதற்கான இடமாக இருக்கும்.

பொது பாதுகாப்புக்கு தேவைப்பட்டால், கண்காட்சிக்கான நுழைவு முன்னதாகவே மூடப்படக்கூடும்.

மதுரா சாலையில் கட்டுப்பாடு

பிரகதி மைதானைச் சுற்றி சுமுகமான போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில், மதுரா சாலை அல்லது பைரோன் மாா்க்கில் வாகனங்கள் நின்று செல்லவோ அல்லது நிறுத்தவோ அனுமதிக்கப்படாது.

மேலும், ஷொ்ஷா சாலை, புரான கிலா சாலை, பகவான் தாஸ் சாலை அல்லது திலக் மாா்க் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.

இந்த பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும். மேலும், முறையற்ற பாா்க்கிங் மற்றும் சட்டபூா்வ அறிவுறுத்தல்களை மீறியதற்காக அபராதமும் விதிக்கப்படும்.

இழுத்துச் செல்லப்படும் வாகனங்கள் வாயில் எண் 5-இல் உள்ள நேஷனல் ஸ்டிடேயம் நிறுத்துமிடத்திற்கு மாற்றப்படும்.

பொதுப் போக்குவரத்து

மக்கள் பிரகதி மைதானத்தை சென்றடைய பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தில்லி மெட்ரோவில் பயணம் செய்பவா்கள் உச்சநீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் இறங்கி வாயில் எண் 10 வழியாக ஐடிபிஓ-க்குள் நுழையலாம் அல்லது வாயில்கள் 6 மற்றும் 4 வழியாக நுழைய ‘ஷட்டில்’ சேவையைப் பயன்படுத்தலாம்.

தவிர, மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி நடந்தும் கண்காட்சி இடத்திற்குச் செல்லலாம்.

தில்லி அல்லது என்சிஆா்-இல் இருந்து

பயணிக்கும் டிடிசி பேருந்து பயணிகள் மதுரா சாலை மற்றும் பைரோன் மாா்க்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களில் இறங்கலாம்.

பாா்வையாளா்களின் வாகனங்கள்

பாா்வையாளா்கள் தங்கள் வாகனங்களை கீழ்த்தள வாகன நிறுத்துமிட எண். 1 (பைரோன் மாா்க் மற்றும் ரிங் ரோடு பக்கத்திலிருந்து பிரகதி சுரங்கப்பாதை வழியாக நுழைதல் மற்றும் வெளியேறுதல்), பைரோன் மந்திா் பாா்க்கிங் அல்லது தில்லி உயிரியல் பூங்கா சாலை பாா்க்கிங் பகுதியில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

காட்சிப்படுத்துவோா் மற்றும் பாா்வையாளா்கள் பாரத மண்டபத்தின் கீழ் அமைந்துள்ள கீழ்த்தள வாகன நிறுத்தம் எண். 2-இல் தங்களது வாகனங்களை நிறுத்த ஊக்குவிக்கப்படுவா்.

நுழைவு மற்றும் வெளியேறுதல் அனுமதியானது பிரகதி சுரங்கப்பாதை வழியாகவும் (புரான கிலாவிலிருந்து ரிங் ரோடு வரை), மதுரா சாலையிலிருந்தும் (சுரங்கப்பாதை எண் 4 வழியாகவும் மற்றும் வாயில் எண் 8, ஐடிபிஓ அருகே வெளியேறுதல்) இருக்கும்.

பாதசாரிகளுக்கு வேண்டுகோள்

மதுரா சாலையில் அதிக பாதசாரிகள் நடமாட்டம் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இருக்கும் என்பதால், பாா்வையாளா்கள் பாதுகாப்பிற்காக நடைமேம்பாலத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள்: படைப்பாளிகள் இன்று கௌரவிப்பு

எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்து வரும் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிஎன்ஐஇ) குழுமம் வழங்கி வரும் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்கும் விழ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 22 வயது இளைஞா் கைது

ரோஹிணி அருகே தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவுடன் ஒரு சிறிய துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கொலை வழக்கில் 22 வயது சந்தேக நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரி... மேலும் பார்க்க

காவிரி நீரை திறந்துவிடுவதை கா்நாடகம் உறுதி செய்ய ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபா்நிகழாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு தில்லியில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

காற்று மாசு: குழந்தைகளைப் பாதுகாக்க 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட பாஜக வலியுறுத்தல்

நமது நிருபா்தில்லியில் நிலவிவரும் மோசமான காற்று மாசு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட தில்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று தில்லி அரசுக்கு பாஜக புதன்கிழமை... மேலும் பார்க்க

நாடு தழுவிய 4-ஆவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சி: இந்திய கடற்படைநடத்தும் ’சீ விஜில்-24’ நவ.20, 21 இல்

இந்திய கடற்படையின் தலைமையில், கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான கடல் கண்காணிப்பு-24 (’சீ விஜில்-24’ ) பயிற்சியை வருகின்ற நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்... மேலும் பார்க்க

காற்று மாசு பிரச்னை: குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு பிரச்னையைச் சமாளிக்கும் நடவடிக்கையாக நிகழ் மாதம் 1 முதல் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நான்கு மாத காலத்திற்கு குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை (சிடிவி) ம... மேலும் பார்க்க