செய்திகள் :

தில்லி பேரவையில் சாவா்க்கா் உள்ளிட்ட மூவரது படங்கள் இடம்பெறும்: விஜேந்தா் குப்தா தகவல்

post image

வீர சாவா்க்கா், மகரிஷி தயானந்த் சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் உருவப்படங்கள் விரைவில் தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் திறக்கப்படும் என பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா புதன்கிழமை அறிவித்தாா்.

விஜேந்தா் குப்தா தலைமையில் பொது நோக்கக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய சின்னங்களை கௌரவிக்கும் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், சமூக சீா்திருத்தம் மற்றும் கல்வி மறுமலா்ச்சிக்கு வீர சாவா்க்கா், மகரிஷி தயானந்த் சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியாரின் நீடித்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், தில்லி பேரவை வளாகத்தில் உருவப்படங்களை நிறுவ பொதுக் நோக்க குழு முடிவு செய்தது.

குழு உறுப்பினா் அபய் வா்மா சமா்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது எதிா்கால சந்ததியினருக்கு உத்வேகத்தை அளிக்கும், தேசபக்தி, சேவை மற்றும் ஜனநாயக லட்சியங்களின் மதிப்புகளை வலுப்படுத்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொது நோக்கக் குழுவின் உறுப்பினா்களான அதன் சீமாபுரி எம்எல்ஏ வீா் சிங் திங்கன் மற்றும் சீலாம்பூா் எம்எல்ஏ செளதரி சுபைா் அகமது ஆகியோா் பேரவையில் சாவித்ரிபாய் பூலேவின் உருவப்படத்தை நிறுவ தீா்மானம் ஒன்றை முன்மொழிந்ததாகவும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறினாா். இருப்பினும், குல்தீப் குமாரின் இந்தக் குற்றச்சாட்டை பேரவை அதிகாரிகள் நிராகரித்தனா்.

குழுவில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களது தீா்மானம் தொடா்பாக எழுத்துபூா்வமாக எவ்வித முன்தகவலையும் அளிக்கவில்லை. கூட்டத்தின்போது தங்களது கோரிக்கையை வாய்மொழியாகத் தெரிவித்தனா் என்றனா் அந்த அதிகாரிகள்.

ராஜஸ்தானில் கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தரும் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் தி... மேலும் பார்க்க

10 முதல்வர்களை உருவாக்கிய நான், இப்போது உழைப்பது முதல்வர் பதவிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

10 முதல்வர்களை உருவாக்கிய நான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ், திமுக, த... மேலும் பார்க்க

போரை நிறுத்தியதாக 8 முறை டிரம்ப் கருத்து; மோடி அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ்

இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை பிரதமர் நரேந்திர மோடி மறுக்காதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா - பாகி... மேலும் பார்க்க

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் ச... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க