செய்திகள் :

தில்லி முதல்வர் யார்? இரண்டு பார்வையாளர்களை நியமித்தது பாஜக!

post image

தில்லி முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு இரண்டு பார்வையாளர்களை நியமித்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாள்களாகும் நிலையில், முதல்வரின் பெயரை பாஜக வெளியிடாமல் இருக்கிறது.

தில்லி பிரதேச பாஜக தலைமை அலுவலகத்தில் இன்றிரவு முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தி புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய பாஜக தலைமை இரு தலைவர்களை பார்வையாளராக நியமித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவி சங்கர் பிரசாத் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கட் ஆகியோர் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தில்லிக்கு மகளிர் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்படுவதாகவும் ரேகா குப்தா மற்றும் அஜய் மஹாவர் பெயர்கள் போட்டியில் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு நிகழ்வு

கீதா காலனியில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வுக்காக நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலக்கவம் வழங்கிய கிழக்கு தில்லி போக்குவரத்து காவல் துறை டிசிபி சஞ்சீவ் குமாா். மேலும் பார்க்க

கிராமப்புற பகுதிகளில் தில்லி அரசு கவனம் செலுத்தும்: அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங்

நமது நிருபா் கிராமப்புற பகுதிகளில் தில்லி அரசு கவனம் செலுத்தும் என்று புதிய அரசின் சமூக நலத் துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். புதிதாக அமைந்துள்ள தில்லி அமைச்சரவையில் ச... மேலும் பார்க்க

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம் சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்த மனுவை விச... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

தில்லி முதல்வா் ரேகா குப்தா குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவரின் அதிகாரபூா்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு தொடா்பான புகைப்பட... மேலும் பார்க்க

அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் உறுதி

பாஜக அரசு தனது அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஆனால், அனைத்தையும் ‘மீண்டும் பாதையில் கொண்டு வர‘ சிறிது காலம் தேவைப்படும் என்றாா். முதல்வா் ரேகா குப்தாவின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தில... மேலும் பார்க்க