விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!
தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.04 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது.
தில்லி, காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுவரை சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.