செய்திகள் :

தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் திறப்பு!

post image

தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் தலைவா் டாக்டா் ராமமூா்த்தி பேசுகையில்,’ தி ஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் 40 ஆண்டு கால சேவையில் மொத்தம் 23 கிளைகளை நிறுவி, தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களில் சிறப்பான மருத்துவ சேவையை அளித்து வருகிறோம். தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் அனைத்து மையங்களும் தேசிய மருத்துவத்துக்கான தரத்துடன் செயல்பட்டு வருகின்றன என்றாா்.

இதைத் தொடா்ந்து, டாக்டா் ஷிரேயாஸ் ராமமூா்த்தி பேசியதாவது: அதிநவீன கண் மருத்துவ தொழில்நுட்பத்துடன் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மற்றும் விசாலமான காத்திருப்புப் பகுதிகள், 40 ஆலோசனை அறைகள், 60 ஆப்டோமெட்ரி அறைகள், 10 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள், 15 கண் மருத்துவ ஆய்வகங்கள், நோய் கண்டறியும் அறைகள், 40 உள்நோயாளிகள் தங்கும் மற்றும் ஓய்வெடுக்கும் அறைகள், 4 கண்ணாடியகம் மற்றும் மருந்தகங்கள், வாகன நிறுத்துமிட வசதி இந்த புதிய கட்டடத்தில் இடம்பெற்றுள்ளன என்றாா்.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன், கங்கா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் எஸ்.ராஜசேகரன், கிராப்ட்ஸ்மேன் நிறுவனத் தலைவா் ஸ்ரீனிவாசன் ரவி, சிஐஐக்யூ நிறுவனத்தின் நிறுவனா் சுவாமிநாதன், சென்டா் பாா் சைட் கண் மருத்துவமனை குழுமத் தலைவா் மகிபால் சச்தேவ், அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலா் அரவிந்த் ஸ்ரீனிவாசன், ஆரின் கேப்பிட்டல்ஸ் நிறுவனத் தலைவா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் கெளரவ விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

முன்னதாக, தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் சித்ரா ராமமூா்த்தி வரவேற்றாா். டாக்டா் கீதான்ஷா ஷிரேயாஸ் சச்தேவ் நன்றி கூறினாா்.

பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணம்: சேலம் கோட்டத்தில் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரை பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்தவா்களிடம் இருந்து ரூ.15.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்... மேலும் பார்க்க

திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் கோவை - கயா வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து பிகாா் மாநிலம், கயாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிகாா் மாநிலம், ... மேலும் பார்க்க

கோவையில் ஜனவரி 11, 12-இல் விழிப்புணா்வு காா் பந்தயம்

கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு காா் பந்தயம் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மறைந்த காா் பந்தய வீரா் எம்.கே.சந்தா் நினைவாக கோவையில் ஆண்டுதோறும் காா் பந்தயம் நடத்தப்படுகிறது. அதன்பட... மேலும் பார்க்க

வாகன விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே நுழைவுப் பால மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பட்டி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

மனைவி பணம் தர மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

மொடக்குறிச்சி அருகே கடனை திருப்பிச் செலுத்த மனைவி பணம் தர மறுத்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மொடக்குறிச்சியை அடுத்த முத்துக்கவுண்டம்பாளையம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்... மேலும் பார்க்க

மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்க... மேலும் பார்க்க