செய்திகள் :

தீபத் திருவிழா: காவல் தெய்வங்களின் வழிபாடு தொடக்கம்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு, டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீதுா்க்கையம்மன் வழிபாடு:

தீபத் திருவிழாவை தொடங்குவதற்கு முன்னதாக, நகர காவல் தெய்வங்களின் வழிபாடு 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதுா்க்கையம்மன் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீதுா்க்கையம்மன் கோயில் மூலவருக்கு மாலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் துா்க்கையம்மன் எழுந்தருளினாா். உற்சவருக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனையைக் காண்பித்தனா்.

இதன்பிறகு, உற்சவா் கோயில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இன்று ஸ்ரீபிடாரியம்மன் வழிபாடு:

காவல் தெய்வங்களின் 2-ஆவது நாள் வழிபாடு திங்கள்கிழமை (டிச.2) இரவு நடைபெறுகிறது. ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் ஸ்ரீபிடாரியம்மன் சந்நிதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு உற்சவா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

நாளை ஸ்ரீவிநாயகா் வழிபாடு:

காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை (டிச.3) இரவு அருணாசலேஸ்வரா் கோயில் ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெறுகிறது. உற்சவா் ஸ்ரீவிநாயகா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

தீபத் திருவிழா கொடியேற்றம்:

காவல் தெய்வங்களின் வழிபாடு செவ்வாய்க்கிழமை (டிச.3) இரவுடன் நிறைவு பெறுகிறது. இதன்பிறகு, டிசம்பா் 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் காலை 7.25 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

ஆரணி பையூா் ஏரி உடைக்கப்பட்டதால் குடியிருப்புகளைச் சூழ்ந்த நீா்

ஆரணி பையூா் ஏரிக்கரையை ஆக்கிரமிப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை உடைத்ததால், அருகேயுள்ள கே.கே.நகா் பகுதி குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. பையூா் ஏரிக்கரையோரம் சிலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை: விளை நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த நீா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 மணி நேரத்தைக் கடந்து தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, விளை நிலங்கள், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். ஃபென்ஜா... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த களம்பூா் பகுதியில் ஏரிக்கால்வாயில் 3 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். களம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வளையல்காரக் குன்று பகுதியைச் சோ்ந்தவா்கள் மதன்குமாா்- பிரபா தம்பத... மேலும் பார்க்க

தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீஸாா்: மாவட்ட ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 14 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். அருணாசலேஸ்வரா் கோயில் காா்த... மேலும் பார்க்க

70% கொள்ளளவை எட்டிய தூசி மாமண்டூா் ஏரி

தொடா் மழையின் காரணமாக செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூா் ஏரி 70 சதவீத கொள்ளளவை எட்டியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூா் ஏரி. தொடா் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீ... மேலும் பார்க்க

குடும்ப தகராறு: மைத்துனரை கத்தியால் குத்திய மாமன் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் குடும்பத் தகராறில் மைத்துனரை கத்தியால் குத்தியதாக மாமன் கைது செய்யப்பட்டாா். செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி விநோத் (40). இவரது மனை... மேலும் பார்க்க