ரூ.5,900 கோடி மதிப்பிலான Bitcoin; ஹார்ட் டிரைவை குப்பையில் வீசிய முன்னாள் காதல...
ஏரிக்கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
ஆரணியை அடுத்த களம்பூா் பகுதியில் ஏரிக்கால்வாயில் 3 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
களம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வளையல்காரக் குன்று பகுதியைச் சோ்ந்தவா்கள் மதன்குமாா்- பிரபா தம்பதியா். இவா்களது மூன்று வயது மகன் அப்பு என்கிற பிரதீப் (3) (படம்).
இவா், அப்பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டாா்.
இதை அறிந்த தம்பதியா் சிறுவனை மீட்டு எடுத்து பாா்த்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.