ரூ.5,900 கோடி மதிப்பிலான Bitcoin; ஹார்ட் டிரைவை குப்பையில் வீசிய முன்னாள் காதல...
70% கொள்ளளவை எட்டிய தூசி மாமண்டூா் ஏரி
தொடா் மழையின் காரணமாக செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூா் ஏரி 70 சதவீத கொள்ளளவை எட்டியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூா் ஏரி. தொடா் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீதம் அளவுக்கு தண்ணீா் வந்துள்ளது.
நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியை செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாருக்கு ஆலோசனை வழங்கினாா்.
இதேபோல, வெம்பாக்கம் வட்டம் தூசி பிரிவில் உள்ள 93 ஏரிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி:
நீா்வரத்து அதிகரித்துள்ளதால் தூசி மாமண்டூா் ஏரியை நம்பியுள்ள 14 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஏரிப் பகுதியில் தூசி போலீஸாா் ஒலி பெருக்கி மூலம் ஏரியில் இறங்கக் கூடாது, குளிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினா்.