செய்திகள் :

தீபாவளிக்கு வெளியாகும் லெஜண்ட் சரவணனின் புதிய படம்!

post image

பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையின்போது திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெஜண்ட் சரவணன், கதாநாயகனாக அறிமுகமான “தி லெஜண்ட்” எனும் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படத்தை, ‘கருடன்’ பட இயக்குநரான துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில், மாறுபட்ட தோற்றத்தில் சரவணன் நடிப்பதாக வெளியாக புகைப்படங்கள், அவரது ரசிகர்களிடையே மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரவணன், இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வரும் தீபாவளி பண்டிகையின்போது உலகளவிலுள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை, பெயர் அறிவிக்கப்படாத இந்தப் புதிய படத்தில் நடிகர்கள் ஷாம், பாயல் ராஜ்புட், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Legend Saravanan's new film to release for Diwali!

இதையும் படிக்க: கோலிவுட் சூப்பர்ஸ்டார்... விஜய்க்கு சிங்கப்பூர் தூதர் புகழாரம்!

இறுதிச்சுற்றில் பெகுலா - ஸ்வியாடெக் பலப்பரீட்சை

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - போலந்தின் இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்னதாக மகளிா் ஒற்றையா் அரைய... மேலும் பார்க்க

ரியல் மாட்ரிட், மான். சிட்டி அபார வெற்றியுடன் முன்னேற்றம்: குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சுற்று ஆட்டங்கள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன. கடைசி கட்ட ஆட்டங்களில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி அபார வெற்றி பெற்றன. இதில் குரூப் ‘ஹெச்’ ஆட்டத்... மேலும் பார்க்க

வெளியானது ‘பீனிக்ஸ்’ பட டிரைலர்

விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு ... மேலும் பார்க்க

உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை- பிரக்ஞானந்தா சாம்பியன்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் தொடரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 தொடரின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றத... மேலும் பார்க்க