தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் முதல்வரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சிவகாசி, சாத்தூா், கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் ஆா்.ஆா். நகரிலுள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் முதல்வரிடம் சிவகாசி ஆல் இந்தியா மேச் சேம்பா் நிா்வாகிகள் மகேஸ்வரன், பிலால் நூா்முகமது, நாகராஜன், பிரமோத், சாத்தூா் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் லட்சுமணன், கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் மா. பரமசிவம், துணைத் தலைவா் ஆா். கோபால்சாமி ஆகியோா் அளித்த மனு:
தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தரவேண்டும். சீன பிளாஸ்டிக் லைட்டருக்கு மத்திய அரசு மூலம் தடை பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவிப்பது, தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும், நச்சு கலந்த காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் லைட்டா் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.
கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வா், இதுதொடா்பாக பரிசீலிப்பதாகக் கூறியதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.