நவஜீவன், திருக்குறள் அதிவிரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கம்
தீவிர வானிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்!
தீவிர காலநிலை மாற்றத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கூறுகிறது.
தீவிர காலநிலை மாற்றத்தால் நீண்டகால கர்ப்பத்துக்கு பெண்கள் ஆளாவதாக ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக, முன்கூட்டிய பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் பாதிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நீண்டகால கர்ப்பம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
பெண்களின் கர்ப்பக் காலம், 36 வாரங்கள் முதல் 40 வாரங்கள்வரையில் இருக்கும். காற்று மாசுபாடு, வெப்பநிலை மாற்றம் முதலான தீவிர வானிலை மாற்றத்தால் பெண்களின் கர்ப்பக் காலம் நீள்வதுடன், பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு செயற்கையாக பிரசவ வலியைத் தூண்டும் நிலையும் ஏற்படலாம்.
இதையும் படிக்க:லஞ்ச தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்தார் டிரம்ப்! அதானி மீதான வழக்கு என்னவாகும்?
மேற்கு ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 12 சதவிகிதப் பிறப்புகள் நீண்டகால கர்ப்பத்தில் தோன்றியது கண்டறியப்பட்டது. குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், முதல்முறை கருத்தரிக்கும் பெண்கள், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், கர்ப்பமடைவதில் பாதிப்படைந்தவர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
காற்றின் தர ஒழுங்குமுறைகள், பொது சுகாதார முன்முயற்சிகள் உள்ளிட்ட காலநிலை தொடர்பான சுகாதார அபாயங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை என்று மருத்துவத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.