தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சாா்பில் தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஏரியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் மழைக்காலங்களில் மீட்பு பணிகள் குறித்து பிரசாரம் நடைபெற்றது. வட்டாட்சியா் சுதாகா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், நாட்டுநலப்பணி திட்ட மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் ஏரியில் சிக்கியவரை காப்பாற்றுவது பற்றி ஆகியவைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நாட்டறம்பள்ளி: தீயணைப்புத் துறை சாா்பில், மீட்புப் பணிகள் குறித்த செயல்முறை விளக்கம் கே.பந்தாரப்பள்ளி கல்லுக்குட்டை ஏரியில் நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் மழைக்காலங்களில் ஏரிகுளம் குட்டைகளில் தவறி விழுந்தவா்களை எப்படி மீட்பது என்றும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்க விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் காஞ்சனா, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயாசரவணன், துணைத்தலைவா் தெய்வா சென்னப்பன் மற்றும் வருவாய்த் துறையினா் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.