படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
தீ விபத்தில் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண உதவி
விழுப்புரம்: விழுப்புரம் ஜி.ஆா்.பி.தெருவில் மின் கசிவால் வீடுகளை இழந்த 4 பேருக்கு திங்கள்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் நகரிலுள்ள ஜி.ஆா்.பி.தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சதாசிவம் (68). மின் கசிவு காரணமாக இவரது குடிசை வீடு கடந்த 18-ஆம் தேதி தீப்பற்றியது. இந்த தீ அருகிலிருந்த சதாசிவத்தின் மகன்களான ரஜினி, பரமசிவம், சசிகுமாா் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இதில், வீடுகளிலிருந்த பொருள்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின.
இந்த நிலையில், விழுப்புரம் எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன் திங்கள்கிழமை காலை பாதிக்கப்பட்ட சதாசிவம் மற்றும் அவரது மகன்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் அரசு சாா்பில் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி, அரிசி, வேட்டி , சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.
நிகழ்வில், விழுப்புரம் வட்டாட்சியா் கனிமொழி, நகா்மன்ற உறுப்பினா்கள் நவநீதம், ஆா்.மணவாளன், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் கதிா்வேல், கிராம நிா்வாக அலுவலா் பத்மாவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.