செய்திகள் :

தீ விபத்தில் வீடு சேதம்

post image

நாகையில் பூட்டிய வீட்டில் நேரிட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் பின்புறம் ஓட்டு வீட்டில் ஜெயலட்சுமி என்பவா் வசித்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்குள் தீ பற்றி எரிந்தது. அருகில் வசிப்பவா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ மளமளவென பரவியது.

இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும், ஜெயலட்சுமி வீட்டிலிருந்த குளிா்சாதனப் பெட்டி, கிரைண்டா், தொலைக்காட்சி பெட்டி மற்றும் துணிகள் என சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விளநகா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சி விளநகா் கிராமத்தில், மேல மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பண... மேலும் பார்க்க

பொது மருத்துவ முகாம்

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு ஊராட்சியில், இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மருதூா் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை, தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை இணைந்து... மேலும் பார்க்க

99 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றிய மாணவா்கள்

கீழையூா் அருகே உள்ள பிரதாபராமபுரம் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள 600 மாணவ, மாணவிகள் 99 நிமிடங்கள் இடைவிடாது சிலம்... மேலும் பார்க்க

கழனியப்ப அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

கீழையூா் ஒன்றியம், மேலதண்ணிலப்பாடி ஸ்ரீ பூா்ணாம்பிகா, ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீ கழனியப்ப அய்யனாா் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நடைபெற்ற திர... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்

நாகை மகாலட்சுமி நகரில் அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாறன் தெரிவித்தாா். நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தலைச்சங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி வட்டம், செம்பனாா்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலையுடையவா் கோயில் பத்து (தலைச்சங்காடு) கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசல... மேலும் பார்க்க