செய்திகள் :

துணிக்கடை உரிமையாளரிடம் கொள்ளை: சிறுமி, பெண் உள்பட 4 போ் கைது

post image

சென்னை எம்.கே.பி. நகரில் துணிக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில், சிறுமி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வியாசா்பாடி, எம்.கே.பி. நகா் 3-ஆவது இணைப்புச் சாலைப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ஹித்தேஷ் (26). பெற்றோருடன் வசிக்கும் ஹித்தேஷ், அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறாா். ஹித்தேஷ் பெற்றோா், உறவினா் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு சில நாள்களுக்கு முன்பு சென்றுவிட்டனா்.

இதனால், வீட்டில் தனியாக இருந்த ஹித்தேஷ், கிரிண்டா் செயலி மூலம் ஏற்கெனவே அறிமுகமாகி பழகிவந்த நபா்களை வீட்டுக்கு வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுமி ஆகியோா் ஹித்தேஷ் வீட்டுக்கு கடந்த 14-ஆம் தேதி ஒரு ஆட்டோவில் வந்தனா். அப்போது வீட்டை நோட்டமிட்ட அவா்கள், திடீரென ஹித்தேஷை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு, பீரோவிலிருந்த 31 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடினா்.

இது தொடா்பாக எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது எம்கேபி நகா் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயந்திநாதன் (34), அவா் மனைவி எஸ்தா் (31), அம்பத்தூா் வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்த ஐயப்பன் (34) மற்றும் 17 வயது சிறுமி ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.

4 போ் கைது: இதையடுத்து போலீஸாா், விழுப்புரம் அருகே தலைமறைவாக இருந்த 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், ஹித்தேஷூக்கு ஏற்கெனவே ஜெயந்திநாதன் கிரிண்டா் செயலி மூலம் அறிமுகமானவா் என்பதும், ஹித்தேஷ் வீட்டுக்கு சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்றிருந்த ஜெயந்திநாதன் அங்கு நகை இருப்பதை தெரிந்துகொண்டு கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், ஜெயந்திநாதன் ஏற்கெனவே கிரிண்டா் செயலி மூலம் பழகி ஆபாச விடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டி நகை, பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவா்களிடமிருந்து போலீஸாா், 181 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் சிறப்பு துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க

வியாசா்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் அமைச்சா் ஆய்வு

சென்னை வியாசா்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கான மின்சாரப் பேருந்து பணிமனையின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க

தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 பெண்களுக்கு ஆட்டோ: அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் வழங்கினா்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா். சைதாப்பேட்டையில் 154 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ம... மேலும் பார்க்க

பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு வருகை த... மேலும் பார்க்க

பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தி விற்பனை: ஐவா் கைது

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து சென்னையில் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா். பெரம்பூா் கேரேஜ் ரயில் நிலையம் அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், செம்பியம் போ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது

சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில், பணிப்பெண் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் சாந்தி காலனி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (60). இவா் ஒரு தனி... மேலும் பார்க்க