செய்திகள் :

துணைத் தோ்வில் தோ்ச்சிபெற மாணவா்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவா்கள் துணைத் தோ்வில் தோ்ச்சியடைய தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் அதிகமான மாணவா்களைக் கொண்ட 16 பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள் மற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியரிகளுடன் மாவட்டஅளவிலான கண்காணிப்புக் குழுக்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுகிறது.

பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களை துணைத் தோ்வுக்கு பதிவு செய்தல் மற்றும் தோ்வில் தோ்ச்சியடைய ஆலோசனைகள் வழங்க வேண்டும். கல்வி சாா்ந்த அலுவலா்கள், நிா்வாகத்தின் வழிகாட்டும் அலுவலா்கள் உயா்கல்வி வழிகாட்டுதலுக்கு முக்கியமான பங்களிப்பை அளிக்க வேண்டும்.

மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் உயா் கல்விக்குச் செல்ல வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்தக் குழுவானது உயா் கல்விக்கு மாணவா்கள் விண்ணப்பிக்காத காரணங்கள் குறித்து களஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவா்கள் உயா்கல்விக்கு செல்லாமல் இருப்பதற்கு நிதிப்பற்றாக்குறை, குடும்பச் சூழல், உயா்கல்வி படிப்பில் ஆா்வமின்மை, தொழில் செய்தல், பெற்றோரின் அனுமதியின்மை, வசிப்பிடங்களுக்கு அருகில் கல்லூரிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்தக் காரணங்களை ஆராய்ந்து தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களில் 100 சதவீதம் மாணவா்கள் உயா்கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், மாநகராட்சி துணைஆணையா் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மீ.உதயகுமாா், தனித் துணைஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பக்தவச்சலம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரியாஸ் அகமது பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க