துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை!
துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவுக்கு எவ்வளவு சாம்பியன்ஸ் டிராபியில் எவ்வளவு சாதகம் எனத் தெரிய ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை என தென்னாப்பிரிக்க வீரர் வான் டர் டுசென் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.
மற்ற அணிகள் இந்தியாவுடன் விளையாட வேண்டுமெனில் 2 இடங்களில் விளையாட வேண்டும். அதற்கேற்ப அணிகளை தயார் செய்ய வேண்டும். ஆனால், இந்தியாவுக்கு அந்தப் பிரச்னை இல்லை. இது முற்றிலும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானதென பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தென்னாப்பிரிக்க வீரர் வான் டர் டுசென் கூறியதாவது:
இந்தியாவுக்கு மிகவும் ஆதாயனது. இது குறித்து பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்ததைப் பார்த்தேன். ஆனால், இது நிச்சயமாக இந்தியாவுக்கு ஆதாயாம்தான்.
ஒரே இடத்தில் தங்கி, ஒரே விடுதியில் இருந்து ஒரேமாதிரி வசதிகள் உடன் பயிற்சி செய்தல், ஒரே திடல், ஒரே பிட்சில் விளையாடுவது நிச்சயமாக இந்தியாவுக்கு ஆதாயம்தான்.
இதைத் தெரிந்துகொள்ள ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. அந்த ஆதாயத்தைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் மீது இருக்கும். இதற்கு அர்த்தம் அவர்களுக்கு அது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ஏனெனில் இது இந்திய வீரர்களுக்கும் தெரியும் என்றார்.