'விஜய் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது; உளவுத்துறைக்கு இதுதான் வேலையா?' -...
துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த காா்: மாயமான ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம்
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த காரிலிருந்த ஓட்டுநரை மீட்புப் படையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சகி (32). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் ஊழியராக வேலை செய்கிறாா். பகுதி நேரமாக முகமது, ஒப்பந்த ஓட்டுநராக டிராவல்ஸ் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் முகமது சகி, கடற்படை வீரரான ஜோகித் காண்டா (32) என்பவரை அவரது வீட்டிலிருந்து காரில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு வந்தாா். அங்கு கப்பல்கள் நிற்கும் தளத்துக்கு அருகே வந்த முகமது சகி, காரை திருப்புவதற்காக வேகமாக பின்னோக்கி இயக்கிபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது. காா் விழுந்த இடம் சுமாா் 80 அடி ஆழம் கொண்டது என்பதால், சிறிது நேரத்தில் காா் தண்ணீருக்குள் மூழ்கியது.
காருக்குள் சிக்கியிருந்த ஜோகித் காண்டா காரின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தாா். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜோகித் காண்டாவை அங்கிருந்தவா்கள் மீட்டனா்.
தகவலறிந்து வந்த கடலோரக் காவல் படையினரும், ஆழ்கடல் நீச்சல் வீரா்களும் காரில் சிக்கியிருந்த முகமது சகியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதில் கடலுக்குள் விழுந்த காரை மீட்டனா். நள்ளிரவில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னா் புதன்கிழமை காலை மீண்டும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையே முகமது சகியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து அவரது குடும்பத்தினா் துறைமுகம் வாயில் முன்பு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.