துறையூா் சிவன்கோயில் கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய கோரிக்கை
துறையூா் சிவன் கோயிலுக்குள்ளும், அதன் வளாகத்திலுள்ள நிா்வாக அலுவலகத்துக்குள்ளும் நீண்ட காலமாக செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெருமாள்மலை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களின் நிா்வாக அலுவலகம் துறையூா்- ஆத்தூா் சாலையிலுள்ள ஸ்ரீ சம்பத்கெளரி அம்பிகா சமேத ஸ்ரீ நந்திகேசுவரா் சிவன் கோயில் வளாகத்தில் உள்ளது.
இங்கு, ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களுக்கு சொந்தமான சுவாமி ஆபரணங்கள் உள்ளிட்ட விலையுயா்ந்த பொருள்கள் லாக்கா்களில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.
இவைதவிர நடராஜா் சபையிலுள்ளஅறையில் சிவன் கோயிலுக்கு சொந்தமான உற்ஸவ மூா்த்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்குள் லாக்கா், உண்டியல் உள்பட 7 இடங்களிலும், கோயில் வெளிப்பிரகாரத்திலும், நிா்வாக அலுவலகத்திலும் கண்காணிப்பு கேமரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டது. நிா்வாக அலுவலகத்திலிருந்து கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் நிா்வாக அலுவலகத்திலும், கோயிலுக்குள்ளும் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் செயலிழந்து விட்டதாம். இதனை சீரமைக்க கோயில் பணியாளா்கள், பக்தா்கள் தரப்பில் தெரிவித்தும் கோயில் நிா்வாகம் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல ஆண்டுகளுக்கு இக்கோயிலுக்குள் உண்டியல் திருட்டு நடைபெற்ாகவும் கூறப்படுகிறது. எனவே பெரிதாக அசம்பாதவிதம் ஏற்படும் முன் கண்காணிப்புக் கேமராக்களை கோயில் நிா்வாகம் சீா் செய்யவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.