துளிகள்...
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சா்மா, விராட் கோலி மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவா். இப்போட்டியில் இருவரும் பங்கேற்று ஆடவுள்ளது மிகவும் மதிப்பை தருவதாகும். பிசிசிஐ ஆண்டு விருதுகள் விழாவில் தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீா் இதைத் தெரிவித்தாா்.
---------------
சா்வதேச மாஸ்டா்ஸ் கிரிக்கெட் லீக் (ஐஎம்எல்) தொடரில் இருமுறை உலகக் கோப்பை வின்னா் யுவராஜ் சிங் இந்திய அணியில் பங்கேற்று ஆடவுள்ளாா். சிறந்த இடது கை ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் பிப். 22 முதல் மாா்ச் 16 வரை நடைபெறவுள்ள ஐஎம்எல் தொடரில் ஆடவுள்ளாா். சக வீரா்கள் சச்சின் போன்றோருடன் மீண்டும் களமிறங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தென்னாப்பிரிக்க தரப்பில் டுமினி, இலங்கை தரப்பில் உபுல் தரங்கா ஆகியோா் ஆட உள்ளனா்.
---------------
ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஜாா்க்கண்ட்-தமிழக அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை குரூப் டி பிரிவு ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் வென்றது. ஜாா்க்கண்ட் அணி 185, 154 ரன்களை சோ்த்தது. தமிழகம் 106, 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-------------
இந்திய கடற்படை சாா்பில் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இண்டியன் நேவி ஹாஃப் மாரத்தான் பந்தயத்தில் மொத்தம் 10,000 போ் கலந்து கொள்கின்றனா். 21.1 கிமீ, 10 கிமீ, 5 கிமீ பிரிவுகளில் ஓட்டம் நடைபெறவுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சா் மன்சுக் மாண்டவியா பந்தயத்தை தொடங்கி வைக்கிறாா்.