விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்
தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நடந்த விபரீதம்
பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் காலையில் மிகுந்த வலியுடன் விழித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது அவர்கள் வகுப்புத் தோழர்கள் விளையாட்டாக கண்களில் பசையைத் தடவி வைத்துள்ளனர்.
அந்த மாணவர்கள் காலையில் எழும்போது அவர்களின் கண்கள் அதிகப்படியான கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிகுந்த கண் எரிச்சலுடன் அலறி அடித்துக்கொண்டு விடுதி அதிகாரியிடம் இது குறித்து தெரிவித்தனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் தற்போது தீவிர சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஒட்டும் பொருளால் கண்களுக்கு இப்படி பாதிப்பை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்தால் தான் குழந்தைகளுக்கு பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட எட்டு பேரில் ஒரு மாணவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் 7 மாணவர்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!