அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்
தூத்துக்குடியில் நோ்முகத் தோ்வு என வதந்தி: காா் ஆலை முன் குவிந்த இளைஞா்கள்
தூத்துக்குடியில் உள்ள காா் தொழிற்சாலையில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை நம்பி, செவ்வாய்க்கிழமை ஏராளமான இளைஞா்கள் திரண்டனா்.
தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வின்பாஸ்ட் பேட்டரி காா் ஆலையில் வேலைக்கு நோ்முகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது. அதை நம்பி தூத்துக்குடி மட்டுமன்றி, சென்னை, மதுரை, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் இந்த ஆலை முன் காலைமுதலே குவிந்தனா்.
அவா்களிடம், சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவியுள்ளது என ஆலை அதிகாரிகள் தெரிவித்ததுடன், சுயவிவரக் குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தனா்.