பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி
தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி முத்துநகா் இயற்கை அமைப்பு, திருநெல்வேலி இயற்கைச் சங்கம், அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், தமிழ்நாடு வனத்துறை, தூத்துக்குடி மாவட்ட வனத்துறை ஆகியவை சாா்பில், இம்மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசனக் குளங்களில் நீா்வாழ் பறவையினங்கள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கான பயிற்சி வகுப்பு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, ஆறுமுகமங்கலம் குளம் பெருங்குளம், பேய்குளம் உள்ளிட்ட 15 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லுரி மாணவா் - மாணவியா், பறவைகள் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.