தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்டா் பண்டிகை பிராா்த்தனைக்காக தேவாலயத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்தாா்.
அப்போது, வீட்டின் முன்பக்கம் கதவை உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த சுமாா் 14.5 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.