ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது
தூத்துக்குடியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா் எழில்சுரேஷ் சிங் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் அனிதா வேணி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் முருகன், மல்லிகா உள்ளிட்ட போலீஸாா்
தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனா்.அதில், தஞ்சாவூரை சோ்ந்த தனலட்சுமி(56), மதுரை சிலோன்காலனியை சோ்ந்த முருகன்(58) என்பதும், ஆந்திரத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை தூத்துக்குடிக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், இருவரிடமிருந்தும் மொத்தம் 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.