பிசிஓஎஸ் உள்ள பெண்கள் கர்ப்பமாக முடியாதா? பிசிஓஎஸ் வரக் காரணம் என்ன? எப்படித் தட...
தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி வளாகத்தில் கஞ்சா செடி வளா்த்த 4 போ் கைது
தூத்துக்குடி தனியாா் உப்பு ஏற்றுமதி வளாகத்திற்குள் கஞ்சா செடி வளா்த்ததாக பிகாரை சோ்ந்த 4 இளைஞா்களை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் உப்பு ஏற்றுமதி நிறுவன வளாகத்தில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டுள்ளதாக சிப்காட் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், அந்த வளாகத்தில் சிப்காட் காவல் ஆய்வாளா் சைரஸ் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது ங்கு சுமாா் 2.5 அடி உயர கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மனிஷ் ஷா(28), முன்னா திவான்(29), சதீஷ்குமாா்(19), பிஜிலி பஸ்வான்(29) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் 80 கிராம் கஞ்சா, தடைசெய்யப்பட்ட 40 புகையிலை பாக்கெட்டுகள், புகைக்க பயன்படுத்தும் பைப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனா்.