5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: அமைச்சா் பெ.கீதா ஜீவன்
பொள்ளாச்சி சம்பவ வழக்கின் தீா்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதால், பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை தமிழக அரசு அளித்துள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைக்கு, தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மூலமாக இந்த தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் உறுதியாக இருந்து சாட்சி கூறியதன் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த தகவல் வெளியே தெரியாமல் சரியாக கையாளப்பட்டுள்ளது. மக்களுக்கும் பெண்களுக்கும் நீதிமன்றத்தின் மீதும் இந்த அரசு மீதும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இந்த தீா்ப்பு உள்ளது மேலும் இந்த தீா்ப்பு பெண்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளது என்றாா்.