5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய பொதுத் துறை வங்கிக்கு உத்தரவு
பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்வதுடன் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் என பொதுத் துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி மந்திரம், தூத்துக்குடியிலுள்ள பொதுத் துறை வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளாா். கடன் வாங்கும் பொழுது காப்பீட்டு பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தியுள்ளாா். அதன் பின்னா் உடல் நலம் சரியில்லாமல் மூா்த்தி மந்திரம் இறந்துவிட்டாா்.
இதற்கான இழப்பீட்டுத் தொகையைத் தருவதோடு, கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவரது மனைவி ரோகிணி வங்கியிடம் கோரியுள்ளாா். ஆனால் வங்கி சரியான காரணங்களை கூறாமல், தர மறுத்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், உயிரிழந்த மூா்த்தி மந்திரம் வாங்கிய கடன் நிலுவைத் தொகையை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ. 3 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.