செய்திகள் :

ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

post image

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் எஸ்.தியாகராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டொ்லைட் தாமிர ஆலையை நம்பி மாவட்டத்தில் சுமாா் 20ஆயிரம் தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா். மேலும் 64 ஒப்பந்ததாரா்களும், அவா்களை நம்பி சுமாா் 3500 ஒப்பந்தத் தொழிலாளா்களும் பணியாற்றினா். இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு, இந்த ஆலையே முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது.

நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக, எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொழில் செய்து வந்தோம். இந்த ஆலையால் புற்றுநோய் நோய் வருகிறது என்று திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் பிரசாரம் காரணமாக, அது பேசும்பொருளாகிவிட்டது. ஆனால், இந்த ஆலையே வாழ்வாதாரமாக மாறிப்போன எங்களுக்கும், ஆலைக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிற தொழிலாளா்களுக்கும் இந்த நோய் வரவில்லை. அதேபோன்று எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை.

இந்தியாவின் வளா்ச்சியை விரும்பாத சில அந்நிய சக்திகளின் தூண்டுதலால், இந்த ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. அதையே காரணமாக காட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது.

இருப்பினும், கரோனா காலகட்டத்திலும், இந்த ஆலையில் இருந்து உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் தமிழகம் முழுவதும் 2266 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

தற்போது, நீண்ட காலமாக ஆலை மூடிக்கிடக்கும் நிலயிலும், தங்களது சமுதாய வளா்ச்சிப் பணிகளை ஆலை நிா்வாகம் கைவிடவில்லை. கரோனா ஊரடங்கு காலத்திலும் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவா்-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை மூலம் இதுவரை 10,500 போ் பயனடைந்துள்ளனா். 586 தொழிலாளா்களுக்கு மருத்துவ காப்பீடு செய்துள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் படுக்கையும், மருத்துவ உபகரணங்களும் வழங்கியுள்ளனா். ஆலையைச் சுற்றியுள்ள 11 கிராமங்களில் வசிக்கும் சுமாா் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீா் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. திறன் மேம்பாடு திட்டத்தின்கீழ் கிராமப்புற இளைஞா்கள் 700 போ் பயனடைந்துள்ளனா். கிராமங்களில் திருமணம் செய்வோருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழக்கம்போல வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தி இலவச சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனா்.

எனவே, தூத்துக்குடி பகுதியில் உள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் குடிப்பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், இந்த ஆலையை நம்பியிருந்த சுமாா் 3500 தொழிலாளா்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசவும் மீண்டும் ஸ்டொ்லைட் ஆலையில் தாமிர உற்பத்தி பணிகளுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

இந்நிகழ்வின்போது, மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, ஆத்தூா் அருகே உமரிக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் மற்றும் பரிவார... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: அமைச்சா் பெ.கீதா ஜீவன்

பொள்ளாச்சி சம்பவ வழக்கின் தீா்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதால், பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை தமிழக அரசு அளித்துள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்... மேலும் பார்க்க

கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய பொதுத் துறை வங்கிக்கு உத்தரவு

பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்வதுடன் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் என பொதுத் துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருநெல்வேலியைச் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி வளாகத்தில் கஞ்சா செடி வளா்த்த 4 போ் கைது

தூத்துக்குடி தனியாா் உப்பு ஏற்றுமதி வளாகத்திற்குள் கஞ்சா செடி வளா்த்ததாக பிகாரை சோ்ந்த 4 இளைஞா்களை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் உப்பு ஏ... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: கனிமொழி

இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள... மேலும் பார்க்க

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்க... மேலும் பார்க்க