செய்திகள் :

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (ஆக.21) நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டை தலைமைத் தாங்கிய அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக-வின் பல முக்கிய நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், விஜய் பேசிய 35 நிமிட உரையில், கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸாரின் துப்பாக்கிச் சுட்டில் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்னோலினின் பெயரை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அப்போது, அவர் பேசியதாவது:

“தூத்துக்குடி ஸ்னோலினின் அம்மா, என்னைத் தனது தம்பி என்றும் அவரது மகளுக்கு நான் தாய்மாமன் என்றும் கூறினார். அந்த அக்காவின் குழந்தைக்கு மட்டுமில்லை, நான் என்னை அண்ணனாக, தம்பியாக நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதரிகளின் குழந்தைகளுக்கும் தாய்மாமன்தான்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் ஸ்னோலின் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற, சில நாள்கள் கழித்து நடிகர் விஜய் தூத்துக்குடியிலுள்ள ஸ்னோலினின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தில், ஸ்னோலினின் தாயார் வனிதா இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

At the 2nd state convention of the TVK, party leader Vijay spoke about the woman killed in the Thoothukudi shooting.

தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்: என்னென்ன?

தவெகவின் மதுரை மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதில், • பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் ... மேலும் பார்க்க

இது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

மதுரை மாநாட்டில் அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். மதுரை மாவட்டம் பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வியாழக்கி... மேலும் பார்க்க

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் இன்று தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனங்களால் பாரபத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் திணறி வருகிறது.தம... மேலும் பார்க்க

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! விஜய் குட்டிக் கதை!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம் என்று தவெக மாநாட்டில் விஜய் குட்டிக் கதையொன்று தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று... மேலும் பார்க்க

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

தமிழக குழந்தைகளுக்கு நான்தான் தாய்மாமன் என்று தவெக மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ... மேலும் பார்க்க

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?

பாஜகவுடன் ஒரு கட்சி நேரடியாகக் கூட்டணி வைத்திருக்கிறது, மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணியில் உள்ளது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.மதுரை மாவட்டம் ... மேலும் பார்க்க