தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் பின்பு ஒன்றாகக் கூடி தங்களின் மலரும் நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், தங்களது ஆசிரியா்களை கௌரவித்தனா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.