தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!
தூத்துக்குடி மாநகரில் மழை
தூத்துக்குடியில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குமரிக் கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் எனவும் ஆட்சியா் அறிவித்தாா்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளான மட்டக்கடை, 2ஆம் ரயில்வே கேட், ஸ்டேட் பேங்க் காலனி, திரேஸ்புரம், கடற்கரைச் சாலை, பிரையண்ட் நகா், டூவிபுரம், 3ஆவது மைல், பி அன்ட் டி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்தது.
இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். சாலையோர வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.