சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்ப...
தூய்மைப் பணியாளரை தாக்கிய பெண் மீது வழக்கு
போடி அருகே தூய்மைப் பணியாளரைத் தாக்கிய பெண் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள குரங்கணி நரிப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பாண்டி மனைவி ராஜம்மாள் (55). இவா் கொட்டக்குடி ஊராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சக பணியாளா்களுடன் நரிப்பட்டி பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கருப்பசாமி மனைவி சுமதி (35) தனது வீட்டின் முன்பு சரியாக தூய்மைப் பணி செய்யவில்லை எனக் கூறி ராஜம்மாளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குரங்கணி போலீஸாா் சுமதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.