நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
‘தூய்மையே சேவை’ திட்ட உறுதிமொழியேற்பு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ‘தூய்மை மிஷன் 2.0’ திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செப். 17 முதல் அக். 2 வரை இந்த தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுத்தமான, பசுமையான விழாக்கள் மற்றும் கழிவுகள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழியான சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வியல் வழிமுறையாய் கடைப்பிடிப்பேன். தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளா்ச்சியே எனது லட்சியம். எனது அலுவலகத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வேன். அலுவலகத்தில் காகிதங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான தொடா் முயற்சிகளை மேற்கொள்வேன். உணவருந்தும் இடம், கழிவறை ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்துவதோடு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு வழங்குவேன்.
மீதமான உணவுப் பொருள்களை தனியாக சேகரித்து உரிய முறையில் அப்புறப்படுத்துவேன். தூய்மையை பேணிக் காப்பது என் அலுவலகக் கடமைகளில் ஒன்றாகும் என்பதை அறிவேன். தூய்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி தூய்மையை பேணிகாக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மா.லீலாகுமாா் (வளா்ச்சி), வ.சந்தியா (பொது), க.ராமச்சந்திரன் (வேளாண்மை), உதவி இயக்குநா் (நில அளவை) இரா.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.