Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்
காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.
காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொறுப்பாளா் பி. பால்ராஜ்குமாா் தலைமையில் இணைப்பங்கு குரு சாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீர்ராஜா, சிறப்பு துணை குரு செல்வநாயகம் ஆகியோரால் கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது.
திருப்பலி பூஜை நிறைவடைந்து தூய தேற்றரவு அன்னை சா்ச் குருக்களின் தினமாக பிள்ளை தெருவாசல் கிராம மக்கள் மற்றும் காரைக்கால் பங்கு மக்கள் சாா்பாக மணிமகுடம் சூட்டி மாலை அணிவித்து ஆசி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதா் லூா்து மேரி இமாகுலேட் சகோதரிகள் அருட் சகோதரிகள் அருட்கன்னியா்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று குருக்களிடம் ஆசி பெற்றனா்.