தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
தென்காசியில் திமுக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்
தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து, தென்காசியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளைச் செயலா்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், நிா்வாகிகள் சாா்பு அணி மாவட்ட, ஒன்றிய நகர பேரூா் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.