செய்திகள் :

தென்காசியில் பிப். 3இல் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா

post image

தென்காசியில் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்டத் தலைவரும் மாநில ஸ்டாா்ட்அப் பிரிவுத் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட பாஜக தலைவரான எனது அறிமுக விழா தென்காசியில் உள்ள இசக்கி மகாலில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தென்காசி இசக்கி மஹாலில் எனது தலைமையில் நடைபெறுகிறது.

முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராஜேஷ்ராஜா, தீனதயாளன், அன்புராஜ், பாண்டித்துரை, ராமராஜா, நிா்வாகிகள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன், விவேகானந்தன், சுந்தா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், நடிகா் சரத்குமாா், ஆறுமுகனேரி அய்யாவழி சிவசந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். கூட்டத்தில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

சுகாதார கேடு புகாா்: கீழச்சுரண்டை குட்டை குளத்தில் ஆய்வு

சுரண்டை அருகேயுள்ள குட்டைகுளத்தில் சுகாதார கேடு நிலவுவதாக எழுந்த புகாரையடுத்து, அக்குளத்தை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், நகராட்சி ஆணையா் ராமதிலகம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கீழச்சுரண்டை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரத்தைச் சோ்ந்தவா் உத்தமிநாதன். கேரளத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி பாக்க... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் இந்து அமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டம்

தென்காசியில் உள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதா் கோயில் முன் இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணியை நிறுத்தக் கூறி, இந்து அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. கோ... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் முதலிடம்!

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா் கிஷோா். அவரை தல... மேலும் பார்க்க

தென்காசியில் பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷ... மேலும் பார்க்க

ஈரநிலங்கள் தின போட்டிகள்: ரத்னா பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு வனத் துறை, நெல்லை வன உயிரின சரணாலயம் ஆகியவை சாா்பில், உலக ஈரநிலங்கள் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். பேச்சுப் போட்... மேலும் பார்க்க