வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜ...
தென்காசியில் 75 குழந்தைகளுக்கு நிதியுதவி
தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தோ்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
குழந்தைகள் நலன்-சிறப்பு சேவைகள் துறையின்கீழ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சாா்பில், கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் காசோலைகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயசந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலா் ஹ. கவிதா, மாவட்ட நிதி ஆதரவு திட்ட ஒப்புதல் குழு உறுப்பினா்கள் உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்கு) எபனேசா் (பொறுப்பு), தொழிலாளா் உதவி ஆணையா் திருவள்ளுவன், மாவட்ட தொழில் மையம் மாரியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.