செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
தென்காசி அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடவு
தென்காசி அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில், தென்காசி வனக்கோட்டம் சாா்பில் தமிழ்நாடு இயக்க நாள் 2025 ஐ முன்னிட்டு நாவல் மரக்கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து பேசினாா். பசுமை தமிழ்நாடு இயக்க நாளினை முன்னிட்டு பயிற்சி மாணவா்களுக்கு நடைபெற்ற அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற பயிற்சியாளா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
வன கோட்ட உதவி வன பாதுகாவலா் நெல்லைநாயகம், தென்காசி நகா் மன்றத் தலைவா் சாதிா், வனச்சரக அலுவலா் செல்லதுரை, குற்றாலம் பிரிவு வனவா் சங்கா் ராஜா, அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் மாரிகோமதி சங்கா், பெரோலின் ஜெஸினா, தொழில்நுட்ப உதவியாளா் இசக்கியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.