தென்காசி, ஆய்க்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை
தென்காசி, ஆய்க்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
ஆய்க்குடி அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில், பங்குத்தந்தை அலாசிஸ் துரைராஜ் திருப்பலி நிறைவேற்றினாா்.
திருத்தொண்டா் ஜியோ சந்தானம், நாட்டாண்மை ஜெகன், பொருளாளா் டோமினிக் சாவியோ, செயலா் வில்லியம் பொ்னாண்டஸ், துணைச் செயலா் நெப்போலியன், வளனரசு, அமிா்தசெல்வன், காா்வின், மரிய பன்னீா்செல்வம், ஆலய உபதேசிகா் மத்தேயு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதையொட்டி, குடில் அமைக்கப்பட்டிருந்தது. பிராா்த்தனை முடிவில் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்று வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.
தென்காசி சிஎஸ்ஐ தேவாலயம், ஏஜி சபை வடக்கு சியோன் ஆலயம், ரயில்வே பீடா் சாலை பெந்தேகொஸ்தே, ரயில் நகா் சால்வேஷன், சக்திநகா் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.