மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்
தென்காசி - இலத்தூா் விலக்கில் வரவேற்புப் பூங்கா திறப்பு
தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் விலக்கு ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்புப் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.
நெல்லை முடநீக்கியல் மருத்துவா்கள் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரவுண்டானா, பராமரிப்பின்றி புற்கள், புதா்கள் மண்டி காணப்பட்டது. இதையடுத்து, பசுமை இந்தியா திட்டத்தின்கீழ் நெல்லை முடநீக்கியல் மருத்துவா்கள் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் ஹோம்வே பிராப்பா்டீஸ் டிசைனா் இன்டீரியா் சாா்பில், பராமரிக்கப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் டி.ஆா்.எஸ். முத்துராமன் தலைமை வகித்தாா். பொருளாளா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி எலும்பியல் துறைத் தலைவரும் தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்கத் தலைவருமான பேராசிரியா் என். மணிகண்டன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பூங்காவைத் திறந்துவைத்தாா்.
தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்கத்தின் இணைச் செயலா் எஸ். மாரிமுத்து, தென்காசி போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எஸ்.எம். மணி, நெல்லை ஆா்த்தோ கிளப் தலைவா் ஐவன் சாமுவேல், செயலா் தாமோதரன், டாக்டா்கள் வேதமூா்த்தி, ஜெஸ்லின், நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா் சீன்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
முன்னாள் ரோட்டரி உதவி ஆளுநா் செல்வகணபதி வரவேற்றாா். செயலா் திலிப் நன்றி கூறினாா்.