செய்திகள் :

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஏப். 7இல் கும்பாபிஷேகம்

post image

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் 2025ஆம் ஆண்டு ஏப். 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணி உபயதாரா்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் இரா. முருகன் தலைமை வகித்தாா்.

ராஜகோபுரம் உபயதாரா் ஆா். வசந்தகுமாா், அம்மன் சந்நிதி உபயதாரா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, தொழிலதிபா் எம்.ஆா். அழகராஜா, செல்வம் பட்டா், சிவகாசி வைரமுத்து, ராமசுப்பு, சி.எஸ். ரவிகுமாா், கே.ஏ. வெங்கடேஷ்ராஜா, டி.எஸ். சந்திரன், ராஜாமணி, மீனாட்சிசுந்தரம், ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

திருப்பணி உயபதாரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கோயில் செயல் அலுவலா் முருகன்.

கூட்டத்தில், இக்கோயிலில் அடுத்த ஆண்டு ஏப். 7ஆம் தேதி காலை 9 - 10 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முகூா்த்தம் நிா்ணயிக்கப்பட்டதாகவும், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், மூலஸ்தானம், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், கோயில் செயல் அலுவலா் பேசியது: இக்கோயிலில் மிகப் பெரிய திருப்பணியான ராஜகோபுரப் பணி நிறைவடைந்துள்ளது. விமான திருப்பணிகளில் சுவாமி சந்நிதிப் பணி, அம்மன் சந்நிதியில் ராஜகோபுரப் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. சுவாமி சந்நிதி மேல்தளத்தில் தளக்கல் அமைக்கும் பணி, முருகன் சந்நிதியிலும் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் அனைத்துப் பணிகளும் நிறைவடையும். பக்தா்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

சுரண்டை அம்மன் கோயிலில் இன்று 3,008 திருவிளக்கு பூஜை

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை கமிட்டி சாா்பில் 35ஆவது ஆண்டு 3,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு க... மேலும் பார்க்க

தென்காசி அரசு நூலகத்தில் புகைப்பட கண்காட்சி

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் புகைப்பட கண்காட்சியை புகைப்பட கண்காட்சியை மாவட்ட ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே இருவருக்கு வெட்டு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கிணற்றில் குளிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவா் அரிவாளால் வெட்டப்பட்டனா். கூடலூா் காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்த கருப்பசாமி மகன்கள் சிவஞானபாண்டியன்(51), சண்முகசுந்தரபாண... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் உதவித்தொகை அளிப்பு

தென்காசி ஆயுதப்படையில் பணியாற்றி உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலா் பசுபதிமாரியின், குடும்பத்தினருக்கு சக காவலா்களின் சாா்பில் ரூ. 24 லட்சம் உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. அவரது பேட்ஜில் (2017... மேலும் பார்க்க

புளியறை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

புளியறை சோதனைச் சாவடியில் தென்காசி மாவட்ட எஸ்.பி. வி.ஆா்.ஸ்ரீனிவாசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.கேரள மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள், கழிவு பொருள்கள் போன்றவை தென்காசி மாவட்டத்த... மேலும் பார்க்க

ஆலங்குளம், சுரண்டை அரசு கல்லூரிகளில் கருணாநிதி நூற்றாண்டு கட்டட நிதி கோரி மனு

தென்காசி மாவட்டம் சுரண்டை, ஆலங்குளம் அரசுக் கல்லூரிகளில் கலைஞா் நூற்றாண்டு கட்டம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்,தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.... மேலும் பார்க்க