செய்திகள் :

தென்காசி: "குடிநீர் பிரச்னை தலைவலியா இருக்கா?" - அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்து கொடுத்த கவுன்சிலர்

post image

தென்காசி நகராட்சி 33 வார்டுகளைக் கொண்ட பகுதியாகும். நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்றக் கூட்டம் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இதில் தொடர்ந்து மன்ற விவாத பொருட்கள் வாசிக்கப்பட்டது. அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தென்காசி நகர்ப் பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் பிரச்னை நீடித்து வருவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

பல நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் நகரின் பல பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தலைவலி மருந்து வழங்கிய கவுன்சிலர்
தலைவலி மருந்து வழங்கிய கவுன்சிலர்

பலர் வெளியிலிருந்து தண்ணீரை பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இயலாதவர்கள் வெகு தூரம் சென்று தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய விதிகளைப் பயன்படுத்தி குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத்தொட்டி, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் போன்ற திட்டங்களை விரிவுபடுத்தப் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இது போன்ற எந்த ஒரு வளர்ச்சி பணிகளுமே இங்கு நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்தக் குடிநீர் பிரச்னையை மேலும் வலியுறுத்தும் வகையில், 10வது வார்டு பகுதியைச் சேர்ந்த சுயேச்சை கவுன்சிலர் முகமது ராசப்பா, 'தங்கள் பகுதிகளில் இந்தக் குடிநீர் பிரச்னையானது உச்சநிலையில் இருக்கிறது.

தலைவலி மருந்து வழங்கிய கவுன்சிலர்
தலைவலி மருந்து வழங்கிய கவுன்சிலர்

இந்தக் குடிநீர் பிரச்னை தொடர்ந்து மக்கள் பிரச்னையாக நீடிக்கக்கூடிய நிலையில் அதிகாரிகளுக்குத் தலைவலியாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே தலைவலி மருந்தை நானே தருகிறேன். இதனை எடுத்துக் கொண்டு மக்கள் பிரச்னையான குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி, நகர்மன்ற தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்தைக் கொடுத்தது பேசுபொருளானது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறி, காவி சாயத்துடன் இருக்கிறார்’’ - உதயநிதி விமர்சனம்

திருவண்ணாமலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வந்தார்.இன்று காலை, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சகோதரர் மகன் திருமணத்தை முன்னின்று... மேலும் பார்க்க

எஸ்சி, எஸ்டி, ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை குறைப்பு; மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறைதான் காரணமா?

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின (எஸ்சி), பழங்குடி (எஸ்டி) மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களில் 40% க்கும் குறைவானவர்களே உதவித்தொகை பெறுவர் என்று தெரிவிக... மேலும் பார்க்க

'அமெரிக்கா விசா பெறும்போது மட்டுமல்ல, அதன் பின்னும்...' - ட்ரம்ப் அரசின் கிடுக்குபிடி

அமெரிக்கா தற்போது அவர்களது நாட்டிற்குள் வருபவர்கள் மற்றும் இருப்பவர்களை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்கள், இனி குடியேறப் போகிறவர்கள் என எவரும் அரசிற்கு எதிரா... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தன... மேலும் பார்க்க

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின... மேலும் பார்க்க

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக... மேலும் பார்க்க