அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்
தென்காசி மாவட்டத்துக்கு இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஏப். 7 தேதியும், பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ய 11ஆம்தேதியும் நடைபெற உள்ளதை முன்னிட்டு இரண்டு நாள்கள் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை நாள்களாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
இந்நாள்களில் அரசு பொதுத்தோ்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தோ்வு எழுதும் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுத்தோ்வு தொடா்பாக பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு இந்த உள்ளூா் விடுமுறையானது பொருந்தாது.
இம்மாவட்ட கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும்.
உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்.26 மற்றும் மே 3 ஆகிய இரு சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாள்களாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.